தமிழக அரசின் “அனைத்து சாதியினருமே அர்ச்சகராகலாம்” என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களை உருவாக்கும் பயிற்சி பள்ளி சேர்ந்து படிக்க மாணவர் சேர்க்கை ஆரம்பித்துள்ளது. தமிழக அரசின் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த பயிற்சிக்கு உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றோடு மாத சம்பளம் 4000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி பதிவு செய்வதற்காக இந்து சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் ஆக இருத்தல் வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள என்ற https://hrce.tn.gov.in இணையதளத்தை பார்க்கலாம்.