
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் twitter பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் “தமிழ்நாடு – சொல் அல்ல; தமிழரின் உயிர்! ….. என குறிப்பிட்ட தோடு தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலம் ஆக்கிட பாடுபட உறுதி ஏற்போம் தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுவதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார்.
'தமிழ்நாடு' – சொல் அல்ல; தமிழரின் உயிர்!
பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே!
1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய்… pic.twitter.com/Pb9Lqx2guL
— M.K.Stalin (@mkstalin) July 18, 2023