
தமிழ்நாட்டின் “முதல் சூப்பர்ஸ்டார்” என்று போற்றப்படும் தியாகராஜ பாகவதர் மகள் சுசிலா (89) முதுமை காரணமாக காலமானார். வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கெனவே இயற்கை ஏய்திவிட்ட நிலையில், சுசிலாவும் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.