
தமிழ்நாட்டில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போது இருந்தே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வருகிற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான தயார் நிலைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு பருவமழைக்கும் முன்னதாகவே அத்தியாவசியமான பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போன்று தற்போதும் பருவமழையால் பாதிப்பு ஏற்படாது. மேலும் தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.