ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன் சேர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்படும்” என்றார்.