
தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட நிலையில் இன்று அவர் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் எல். முருகன், அதிமுக ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் விமர்சித்து வரும் நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜனும் வெளுத்து வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி யா இல்லையெனில் மன்னராட்சியா.? உதயநிதி ஸ்டாலின் பிறப்பதற்கு முன்பாகவே திமுக கட்சியில் இருந்து பலர் கடுமையாக உழைத்த கட்சியை வலுப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் பதவி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக வாரிசு அரசியல் செய்து வருகிறார்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம். இது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது கிடையாது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் கண்டிப்பாக கட்சிக்குள் பிரச்சினைகள் வரும் என்று தெரிவித்தார்.