இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய  வாக்கு வங்கியை பாஜக சிறுக சிறுக அறுவடை செய்து வருவதாகவும், அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறுவதாகவும் கூறுகின்றனர். அதிமுக மீண்டும் பலம் பெறாவிட்டால், பாஜகவின் எழுச்சியைத் தடுப்பது கடினம் என கூறப்படுகிறது