தமிழ்நாட்டில் மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சியின் மூலமாக செயற்கை முறையில் கருவூட்டல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் உறை விந்து குச்சி மூலம் கிடாரி கன்றுகளை ஈன்ற செய்து பசு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

ஒரு ஊசியின் விலையானது அரசு மானியம் வழங்குவதன் மூலமாக 160ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு மொத்தம் 14 ஆயிரத்து 829 உறைவிந்து குச்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.