நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தவில்லை.

அதன் பிறகு அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் திண்டுக்கல் மோகன்ராம் மற்றும் சாமி ரவி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்களையும் தற்போது என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடப்பது எல்லாமே போலியான என்கவுண்டர்கள்.

போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய முயற்சி செய்யாமல் வழக்கை முடித்து வைப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகிறார்கள். யார் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் அரசியலமைப்பில் மாற்றத்தை உருவாக்க வந்தவன் என்பதால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன்.

தேர்தல் வரும்போது திருவிழா போன்று அமலாக்கத்துறையும் வருமானத் துறையும் அடிக்கடி வருவார்கள். சட்டமன்றத்தில் தூங்கிக்கொண்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவது கிடையாது. தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை சந்தித்த கட்சி நாங்கள்தான். ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்றார்.

மேலும் அண்ணாமலை எனக்கு நண்பர். அவர் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவை பார்க்கிறேன். மேலும் நான் டிரம்ப் மற்றும் புதினோடு நெருக்கமாக இருக்கிறேன் என்று பின்னர் சந்தித்த பேட்டியில் கூறினார்.