விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜயின் தாய் தந்தை இருவரும் கொரட்டூர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான சந்திரசேகர் கூறியதாவது, மாநாடு சிறப்பாக நடக்கணும்.

எங்க தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்கணும். ஒரு பெரிய நிலைமைக்கு வரணும். தமிழ்நாட்டுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கணும். தளபதிக்காக வேண்டி வடசென்னையை சேர்ந்த தொண்டர்கள் கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் பண்ணி இருக்காங்க. அண்ணனுக்காக வேண்டிக்கிட்டு அன்னதானம் பண்ணி இருக்காங்க என கூறியுள்ளார்