
இந்திய சினிமாவில் மாதந்தோறும் பிரபலமான இருக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலை ஆர் மேக் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் வெளியிடும். இந்த நிறுவனம் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளை கருத்துக்கணிப்பின் மூலம் முடிவு செய்து வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தைப் பிடித்து பிரபலமாக இருக்கும் நடிகைகளின் பட்டியலை ஆர்மேக்ஸ் மீடியா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு இரண்டாம் இடத்தை சமந்தாவும், 3-ம் இடத்தை த்ரிஷாவும், 4-ம் இடத்தை கீர்த்தி சுரேஷும், 5-ம் இடத்தை தமன்னாவும் பிடித்துள்ளனர். அதன் பிறகு 6-ம் இடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், 7-ம் இடத்தில் அனுஷ்காவும், 8-ம் இடத்தில் ஜோதிகாவும், 9-ம் இடத்தில் பிரியங்கா அருள் மோகனும் இருக்கிறார்கள். மேலும் 10-வது இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.
Ormax Stars India Loves: Most popular female Tamil film stars (Jan 2023) #OrmaxSIL pic.twitter.com/HsEmirsXo3
— Ormax Media (@OrmaxMedia) February 14, 2023