
டிடி தமிழ் அலுவலகத்தில் தற்போது ஹிந்தி மாத கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் அதில் ஒரு வார்த்தையை மட்டும் ஆளுநர் ரவி விட்டுவிட்டார். அதாவது “திராவிட நல் திருநாடு” என்ற வார்த்தையை மட்டும் விட்டுவிட்டு ஒலிபரப்பினர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் தற்போது ஆளுநருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து திராவிட என்ற வார்த்தையை பிரித்து விட்டீர்கள். இதே போன்று தேசிய கீதத்திலிருந்து உங்களால் திராவிடம் என்ற வார்த்தையை பிரிக்க முடியுமா என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே டிடி தமிழ் தொலைகாட்சியில் ஹிந்தி திருவிழா கொண்டாடப்படுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு விட்டார். இதற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தை விட்டுவிட்டு பாட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ் தாய் வாழ்த்திலிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிட்டு பாடியது தமிழ்நாடு சட்டப்படி குற்றமாகும் என்றும் அவர் ஆளுநரால் அல்லது ஆரியனரா என்று கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமான பிரச்சனை ஆக வெடித்துள்ளது.