தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் சச்சின் திரைப்படமும் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை கலைபுலி எஸ். தானு தயாரித்துள்ள நிலையில், ஜான் இயக்கியிருந்தார்.

நடிகை ஜெனிலியா மற்றும் நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரிலீசை முன்னிட்டு ட்ரெய்லர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆன நிலையில் தற்போது திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. இந்த படம் 4கே தரத்தில் வெளியாகிறது. மேலும் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.