சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.