திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு-தானம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரட்டைப் பிறவிகளான பிரேம்குமார், ராஜ்குமார் என்ற மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்  ராஜ்குமார் சொந்த அத்தை மகள் பியூலா ராணியை காதலித்து இரண்டு வீட்டார் எதிர்ப்பை மீறி நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தங்களது மகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என முத்திரைத்தாள் பத்திரத்தில் பெண் வீட்டார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் பியூலா ராணி கடந்த சனிக்கிழமை வீட்டில் சடலமாக கிடந்தார். இதனை அறிந்த பெண் வீட்டார் கதறி போய் வந்தனர். பியூலா ராணியின் அம்மா தனது மகள் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழுது புலம்பியதாக கூறியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி ராஜ்குமாரின் அண்ணன் பிரேம்குமார் தன்னிடம் அத்துமீறியதாக பியூலா ராணி கூறியதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். ராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது கழுத்தின் முன் பகுதியில் மட்டும் தான் காயம் இருந்துள்ளது.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கான தடயங்கள் இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்துள்ளனர். இதனால் ஏதோ தவறு நடந்திருக்கிறது என பியூலாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரையும் பிரேம்குமாரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை தான் பியூலா ராணி இருந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.