திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம். அந்த போராட்டத்தில் முழுக்க முழுக்க ஈடுபட்டவர்கள் எங்களுடைய கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் பாஜக தான் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

எனது எண்ணத்தை பொறுத்தவரையில் பாஜக திமுக ஆட்சிக்கு அபாயத்தை கொடுக்க வேண்டும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் என்பது தேவையற்ற போராட்டம். அங்குள்ள இஸ்லாமியர்கள் இந்துக்களின் பேட்டிகளில் இரு மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவித பிரிவினையும் கிடையாது என்று அவர்களே சொல்கிறார்கள். தேவையற்ற பிரச்சனைகளே என்று மக்களே எடுத்து கூறி இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த பிரச்சினை தேவையற்ற பிரச்சனையாக தான் நான் கருத வேண்டி உள்ளது” என்று கூறியுள்ளார்.