நடிகர் ஸ்ரீ குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவரின் அறிவுரைப்படி சோசியல் மீடியாவில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை நலம் விரும்பிகள், நண்பர்கள், ஊடகத்தினருக்கு தெரிவித்து கொள்கிறோம்.

அவரது உடல் நலனில் கவனம் செலுத்தி மீண்டும் நலம் பெற அவரின் தனி உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அது எங்களை பாதிக்கிறது. ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தெரியாமல் தவறான தகவல்களையும் வதந்திகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பு ஊடகத்தினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

அவரது உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒருவரின் நேர்காணல்கள் மூலம் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். புரிதலுக்கும், அன்புக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.