தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் குற்றவாளி மீது 90 நாட்களில் உச்சப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று கூறினார்.

அதன்பிறகு யார் அந்த சார் என்று கேட்கும் நிலையில் அந்த சார் யாராக இருந்தாலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒருவேளை அந்த சார் யார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள் என்று கூறினார். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது… யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!

வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் ‘சார்கள்’ பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!