தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் அடுத்த மாதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.