
பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்காரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஓர் திருடன் ஓடும் ரயிலில் பயணம் செய்த பயணியிடம் இருந்து ஜன்னல் வழியாக செல்போன் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் யோசனை தப்பி, அந்த பயணி விழிப்புடன் திருடனை உடனே பிடித்து விட்டார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவுடன் பரவி வருகின்றது.
बिहार : ट्रेन की खिड़की मोबाइल छीनने के चक्कर में फस गया चोर, लोगो ने चलती ट्रेन में लटका दिया , रास्ते भर यात्रियों ने खिड़की से लटका कर पीटा,वीडियो हुआ वायरल pic.twitter.com/vq7Gbgb11U
— FirstBiharJharkhand (@firstbiharnews) April 9, 2025
வீடியோவில், திருடன் ரயிலின் ஜன்னலில் இருந்து வெளியே தொங்கியவாறு உயிர் பயத்தில் இருக்கிறார். உள்ளே இருந்த பயணிகள், அவர் கைப்பற்றியதும் அவரது கையை வலுவாக பிடித்து ரயிலின் ஜன்னலில் தொங்க வைத்தனர். பின்னர் சிலர் அவரை அடிக்கவும் தொடங்கினர். அவரின் தலையில் ஒரு பயணி கொட்டிக்கொண்டே இருந்தார். இந்த சம்பவம் ரயில் ஓடிக்கொண்டிருந்த போதே நடந்ததனால், இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டதா என்பது தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை.