தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் தங்கி சர்வதேச அரசியல் படிப்பு படிக்க இன்று லண்டன் செல்வதாக கூறினார். அதன் பிறகு ஒரு மாநில தலைவர் படிப்பதற்காக 3 மாதங்கள் விடுவித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் ஒரே ஒரு கட்சி பாஜக தான் என்று கூறினார்.

இந்தியாவிலேயே படிப்பதற்காக ஒரு மாநில தலைவரை படிப்பின் முக்கியத்துவம் கருதி பாஜக கட்சி தலைவர் பதவியில் இருந்து விடுவித்துள்ளது. மேலும் தலைவர் பதவி என்பது ஒரு வெங்காயம் மாதிரி. அதை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. எனக்கு மற்றவர்கள் போன்று பதில் சொல்ல விருப்பமில்லை என்று கூறிவிட்டு செல்ல முடியும். ஆனால் அப்படி செய்வது பொதுமக்களுக்கு எதுவுமே தெரியாது. எனவே தான் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்றும் கூறினார்.