
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா(13). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விஷ்வா விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கடித்தது. அதில் விஷ்வாவிற்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஸ்வாவின் பெற்றோர் ரட்டிப்பாளையம் அரசு சுகாதார நிலையத்தில் விஸ்வாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த விஷ்வாவிற்கு அதிகமாக தலைவலி ஏற்பட்டதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் விஷ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வாவிற்கு நாய் கடித்ததால் தான் இறந்துள்ளாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.