ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு பட இயக்குனர் வினோத் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது “மிகப்பெரிய நடிகர்களின் படங்களை டைரக்டு செய்யும்போது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் கண்டிப்பாக இருக்கும்.

வியாபாரம் குறித்த கதையை செய்தாலும், வியாபாரத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை விதைத்து விடக்கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளோம். குறிப்பாக அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு கண்டிப்பாக பிரஷர் இருக்கும். இதற்கிடையில் துணிவு படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்காகவும், 2ஆம் பாதி அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்” என்று அவர் பேசினார்.