இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி. இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். இவர் இன்று தன்னுடைய 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தோனி தன்னுடைய மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.