
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் வாயிலாக பிரபலமான இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் எல்ஜிஎம் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் எல்ஜிஎம் திரைப்படத்தின் முதல் பாடலான “சலனா” பாடல் 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.
Gear up as we bring to you the first single from #LGM– Let’s Get Married on the 15th of June! #Salana #LGMOnSonyMusic pic.twitter.com/y6tsWgLCpa
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) June 13, 2023