
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்”எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கட்சியின் முதல் மாநாடு நடத்த இருப்பதாகவும் அதற்கான பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் விஜயின் கடைசி படமான “விஜய் 69” என்ற படத்தை எச். வினோத் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக எச்.வினோத் சென்னையில் அலுவலகம் ஒன்றை அமைத்து படத்திற்கான பணியை தொடங்கியுள்ளாராம். மேலும் இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.