தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது நடிகர் விஜய் இனி பொய் சொல்லி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய கைகள் கறை படியாத அரசியல் கைகள். கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி சேரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆனால் அந்த கதவை நான் மூடிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அதோடு நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி நான் கிடையாது. பாமக மற்றும் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி I don’t care என்று என்று கூறியுள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் நிலையில் தொடர்ந்து திமுக கூட்டணியில் மட்டும் தான் நீடிப்போம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் திமுக கூட்டணியில் அழுத்தம் காரணமாகத்தான் விகடன் சார்பாக நடத்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வரவில்லை என்று நேரடியாக கூறியிருந்தார். இதன் மூலம் அவர் திருமாவளவனுக்கு கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்த நிலையில் திருமாவளவன் அதனை மறுத்துவிட்டார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது திருமாவளவன் விஜயுடன் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டேன் எனவும் அந்த கூட்டணி கதவை எப்போது மூடி விட்டேன் எனவும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.