
விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 தேர்தலில் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகும் கட்சிகள் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேச்சுகள் அடிபட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் தான் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்கும் என சோசியல் மீடியாவில் பலரும் பேசி வந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வியூகம். அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி என்பது முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேர் ஆதரவோடு வென்று மக்களின் நலனுக்காக நல்லாட்சி அமைப்பதை குறிக்கோள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.