
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது.
அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
இந்நிலையில் நடிகர் விஜய் ரேம் வாக் வந்தபோது தொண்டர்கள் அவரை நோக்கி கட்சி துண்டினை வீசினார்கள். இந்த துண்டினை நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் எடுத்து போட்டுக் கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் முதலில் 100 அடி உயரக் கொடி கம்பத்தில் கொடியேற்றிய பிறகு அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கட்சியின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.