
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய கட்சியின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்ட விழா நடைபெற இருக்கிறது. அதன்படி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதாவது பொதுக்குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட 2500 பேர் அமரும் விதமாக இட வசதி மற்றும் அவர்களுக்கு சைவம் அசைவ உணவுகள் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் வந்து செல்வதற்கு எதுவாக வசதிகள் செய்யப்பட்டதோடு வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்படுகிறது. மேலும் இன்னும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு நடிகர் விஜய் தமிழக முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.