
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது கட்சியின் மேலிடம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் படி மாவட்ட வாரியாக அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும்.
இதில் யார் அதிக உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் பிரம்மாண்ட மாநாடு கூட்டத்தின் போது பரிசு வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க நிர்வாகிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இளம் நடிகர் விஜய் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்த நிலையில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 13-ல் நடைபெற உள்ளது. இதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் ஆணையரை சந்தித்து அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளார்.