தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் ஈசிஆரில் நடைபெற இருக்கும் நிலையில் சுமார் 2500 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் பகல் ஒரு மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கமகம விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கேரட் அல்வா, வடை, காலிஃப்ளவர் 65, பூரி, பட்டாணி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, கதம்ப சாம்பார், ரசம், வெண்ணிலா ஐஸ் கிரீம், தயிர், பீன்ஸ் பருப்பு உசிலி, மோர், அப்பளம், வாழைப்பழம், ஊறுகாய், அடைப்ப பிரதமம் போன்றவைகள் உணவில் இடம் பெற்றுள்ளது. மேலும் சைவ சாப்பாடுக்கு இன்று விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.