
கேரளாவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
உயிரிழந்த 11 வயது சிறுமியின் சகோதரி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அப்போது தன்னையும், தனது சகோதரியையும் தாய் வழி தாத்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் சிறுமியின் தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சிறுமியின் தாத்தாவுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.