
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தண்டபாணி அதே பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இதே போல அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் முகமது யாகூப்(56) என்பவர் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தண்டபாணியையும், முகமது யாகூப்பையும் கைது செய்தனர்.