புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியில் செந்தில் மற்றும் மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கஸ்வான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த குளத்தில் தாமரை பூவை பறிக்க சென்றுள்ளது.

சேற்றில் இருந்த தாமரை கொடிகளில் சிறுவனின் கால்கள் சிக்கி குளத்து நீரில் மூழ்கியுள்ளான். சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு கதறி அழுத சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.