
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து பைரவி என்ற மனைவி இருந்த நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் 8 மாத கைக்குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சாதத்தை மிக்ஸியில் போட்டு சிந்து அரைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிந்துவின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தாயை இழந்து குழந்தைகள் பரிதவிப்பில் இருப்பது அந்த பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.