கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  சிக்கி பலியாகியுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலரும் நிவாரண பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவை சேர்ந்த பாவனா-சஜின் தம்பதி ஒரு நெகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இவர்கள் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையும், 4 மாதத்தில் ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் பாவனா நிவாரண முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.