தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் செயல்பட்டு வரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் மூன்று பேர் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.