பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ்தான் வீரர் ‌அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். இது தொடர்பாக நீரஜ் சோப்ராவின் தாய் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, என்னுடைய மகனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவன் இந்த அளவுக்கு விளையாடியதை பெரிதுதான். அவன் வெள்ளிப் பதக்கம் என்றதே எங்களுக்கு தங்கத்திற்கு சமம் தான். அதன் பிறகு அர்ஷத் நதீமும் என் மகன் தான்.

 

அவர் தங்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி. அவரும் நீரஜூம் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் போன்றவர்கள். அவர்கள் இருவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறினார். மேலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா எதிரிகள் என்று கூறிவரும் நிலையில் தற்போது இந்திய நாட்டின் தாய் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை தன் மகன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியது ஆச்சரியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுவதோடு அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. இதேபோன்று பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் ‌நதீமின்‌ தாயும் நீரஜ் சோப்ராவை தன்னுடைய மகன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.