
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் விரத்தியான ஜாஸ்மின் தனது பிள்ளைகளுடன் அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் தனியாக வசித்து வந்த அண்ணாதுரை தன்னுடைய மனைவிக்கு போன் செய்து மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கூறிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாதுரை மீண்டும் தன்னுடைய மனைவிக்கு போன் செய்து நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் உடனடியாக தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அண்ணாதுரை கோர்வையால் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.