
பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பை பார்த்தாலே தலை தெறிக்க ஓடிவிடுவோம். ஆனால் பாம்பை சிலர் துணிச்சலாக பிடிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். அந்த வகையில் வாலிபர் ஒருவர் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை வெறும் கையால் தைரியமாக பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தரைபாலத்தின் மீது நிற்கிறார்.
அந்தப் பாலத்தின் கீழே ஒரு ராட்சத மலை பாம்பு ஊர்ந்து சென்றது. அந்த வாலிபர் அதனை பார்த்த நிலையில் உடனடியாக பாம்பை சற்றும் பயமின்றி துணிச்சலாக கைகளால் பிடித்துவிட்டார். அதாவது முதலில் வாலிபர் கால்வாயில் இறங்கிய நிலையில் ஒரு கம்பி மூலமாக பாம்பை மேலே இழுக்கிறார். பின்னர் அதனை கைகளால் பிடித்து விட்டார். அந்த ராட்சத பாம்பை அவர் கைகளால் தூக்கும்போது அது சீறுகிறது. இருப்பினும் அவர் பயப்படாமல் அசால்டாக பிடித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram