
ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பிரெமர் பே கடல்பரப்பில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட ஒர்கா வகை திமிங்கிலங்கள் ஒன்று கூடி, 18 மீட்டர் நீளமுள்ள பிக்மி ப்ளூ வேல் திமிங்கிலத்தை தாக்கி கொன்றுள்ளன. உலகின் மிகப்பெரிய விலங்கான ப்ளூ வேலின் சிறிய இனமான இந்த பிக்மி வேல், பாதுகாக்கப்படும் வகை விலங்காகும்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒர்காக்கள் அந்த பிக்மி வேலை பின்தொடர்ந்து துர்த்தியதால் அது மிகவும் களைத்துப்போய், பின்னர் பல வினாடிகளில் கொல்லப்பட்டதாக ‘நேச்சுரலிஸ்ட் சார்டர்ஸ்’ குழு தெரிவித்துள்ளது.
View this post on Instagram
இந்த வகை சம்பவம் இது வரை நான்காவது முறை நடந்துள்ளது. ஒர்காக்கள் கூட்டமாகவே வாழும் உயிரினமாகவும், அதிகமாக வேட்டையாடும் தன்மையை கொண்டதாகவும் இருப்பதால் இவை கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு பசிபிக் கடலில் வெயில் ஷார்க்குகளையும் ஒர்காக்கள் வேட்டையாடியிருப்பது குறித்த தகவல்களும் வெளியாகியிருந்தன. பொதுவாக டால்பின் இனத்தைச் சேர்ந்த ஒர்காக்கள், மீன்கள், பென்குயின், கடற்கரை சிங்கம் போன்றவைகளை உணவாக உண்பதுடன், ப்ளூ வேல், ஷார்க் போன்ற பெரிய உயிரினங்களையும் குழுவாக தாக்கி வேட்டையாடும் திறமை கொண்டவை.