
தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்று தமிழக முழுவதும் பொது விடுமுறை கிருஷ்ணஜெயதியை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு விடுமுறை தினங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் நாளை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.