
ஆந்திராவைச் சேர்ந்த திலீப்-ஷோபா தம்பதியினர் தஞ்சையில் கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி ரயில்வே ஸ்டேஷனின் தனது ஐந்து மாத குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். இரவு தூக்கிய தம்பதி அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தை மணிகண்டாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள இடங்களில் தங்களது குழந்தையை தேடி பார்த்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை தூக்கி அந்த இடத்தில் விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதி மக்கள் இரண்டு மணி நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.