தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரை நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். அதாவது தன்னுடைய பிறந்தநாள் அன்று சீமான் ரஜினியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தற்போது ரஜினிகாந்த் இப்போது நேரம் கொடுத்துள்ளதால் சீமான் நேரில் சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் வென்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் சீமானின் வாக்கு வங்கி குறையும் என்று கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் உள்ள பல நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். இது  சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் இந்த நேரத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.