
ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹயாத் நகரில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று திடீரென அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள அனைத்து குடிசை வீடுகளுக்கும் பரவியது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அனைவரும் உடனடியாக குடிசையை விட்டு வெளியேறினர். பின்பு அவர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீயின் வேகம் அதிகமானதால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
இருப்பிலும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.