
சென்னையின் முன்னாள் மேயரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி (72) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக அவர் சமீப காலமாக கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.