சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மகாதீர் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் ஜிம் உரிமையாளராக இருக்கிறார். இவர் நேற்று ஜிம்மில் நீண்ட நேரமாக உடற்பயிற்சி செய்துள்ளார். அதன் பின் அவர் குளிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு பார்த்துள்ளனர். அப்போது காதில் ரத்தம் வழிந்தபடி அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேலாக உடற்பயிற்சி செய்வார் என்று அவருடைய தாய் கூரியுள்ளார். மேலும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ததால் தான் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.