சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் நீதி கேட்டு வந்துள்ளார். தன்னை பள்ளிக்குப் போக கூடாது என்று தந்தை கூறுவதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின் படிப்பை நிறுத்தி அவரை வேலைக்கு அனுப்பி விட்டனர்.

தற்போது எனது படிப்பையும் நிறுத்த கூறி கட்டாயப்படுத்துகின்றனர். எனக்கு படிக்க வேண்டும் எனது அப்பாவை திருத்த வேண்டும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.