
லிஸ் என்ற பெண் ஒருவர் தன்னுடைய படுக்கை அறையில் ஆறு அடி நீளம் கொண்ட சவப்பெட்டி ஒன்றை மெத்தைக்கு பதிலாக பயன்படுத்தி அதில் தூங்குகின்றார். அந்த சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதை குறித்து அந்த பெண் விளக்கம் அளித்துள்ள நிலையில், தினம் தோறும் இதில் படுத்து உறங்குவதால் தன்னுடைய கவலைகள் அனைத்தும் மறந்து விடுவதாகவும் அதில் படுக்கும் சவுகரியம் மெத்தையில் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு அமைதியும் ஆறுதலான உணர்வையும் அளிப்பதுடன் இந்த பெட்டிக்குள் இருக்கும்போது உலகின் மற்ற பகுதியில் இருந்து விலகி இருப்பது போல உணர்வதாகவும், பாதுகாப்பான இடமாக உணர்வதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த வினோத பழக்கத்தை பார்த்த பலரும் வியந்து போய் உள்ளனர்.
She has a coffin in her bedroom that she sleeps in. pic.twitter.com/6rPN9qrV5t
— SPOOKY QENNY (@AKBrews) October 24, 2023